முழு Unicode வாசிப்புப் பதிப்பு

பட்டினப்பாலை

Paṭṭiṉappālai · A poem on Kāvirippūmpattinam and Karikala.

பதிப்புக் குறிப்பு: Project Madurai வெளியிட்ட Unicode மின்பதிப்பிலிருந்து வாசிப்பிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது. மூலத்தில் துணுக்குகள் அல்லது சுருக்கப் பதிப்பு மட்டுமே உள்ள இடங்களில் அந்த நிலை மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. உரை மாற்றப்படவில்லை.
Source and attribution: Project Madurai Unicode edition. Project Madurai’s edition header is preserved below.
Project Madurai edition header
paTTinappAlai (in tamil script, unicode /utf-8 format)
paTTinappAlai
of kaTiyalUr uruttirang kaNNanAr
(one of pattuppATTu anthologies)
in Tamil script, unicode/utf-8 format
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான
"பட்டினப்பாலை"
ஆசிரியர் :: கடியலூர் உருத்திரங் கண்ணனார்
Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext Preparation : Staff & Students of K.A.P. Viswanatham Higher Secondary School, Tiruchirappalli, Tamilnadu, India
Dr. C. Kesavaraj, BDS, FICD, Trustee, K.A.P. Viswanatham Higher Secondary School (Project Sponsor)
Dr. R. Vasudevan
, Former Director, School of Energy, Bharathidasan University, Trichi, Tamilnadu (Tech. support)
Dr. R. Rajendran, Senior Teacher, K.A.P. Viswanatham Higher Secondary School, Trichi, Tamilnadu (coordination)
Text Input : Ms. J. Jayanthi (Librarian); S. Sinnakannan (Typist), Sivadayal, Christopher (Students), K.A.P. Viswanatham Higher Secondary School, Trichi, Tamilnadu, India
Proof-reading: Ms. Sarala Sandirasegarane, Kanpur, India
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script in Unicode encoding (utf-8 format).
This page was first put up on the Net on June 22, 2000
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவதான "பட்டினப்பாலை" பட்டினப்பாலை பாடியவர் :: கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடப்பட்டவன் :: திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்) திணை :: பாலை துறை :: செலவழுங்குதல் மொத்த அடிகள் :: 301 ---------- வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி புனல்பரந்து பொன்கொழிக்கும் விளைவறா வியன்கழனிக் கார்க்கரும்பின் கமழாலைத் தீத்தெறுவிற் கவின்வாடி 10 நீர்ச்செறுவி னீணெய்தற் பூச்சாம்பும் புலத்தாங்கட் காய்ச்செந்நெற் கதிரருந்து மோட்டெருமை முழுக்குழவி கூட்டுநிழல் துயில்வதியும் கோட்டெங்கிற் குலைவாழைக் காய்க்கமுகிற் கமழ்மஞ்சள் இனமாவின் இணர்ப்பெண்ணை முதற்சேம்பின் முளையிஞ்சி அனகர் வியன்முற்றத்துச் 20 சுடர்நுதல் மடநோக்கின் நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும் கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும் முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும் விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக் கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக் குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல்லாய்ப் ப·றி 30 பணைநிலைப் புரவியின் அணைமுதற் பிணிக்கும் கழிசூழ் படப்பைக் கலியாணர்ப் பொழிற் புறவிற் பூந்தண்டலை மழைநீங்கிய மாவிசும்பின் மதிசேர்ந்த மகவெண்மீன் உருகெழுதிறல் உயர்கோட்டத்து முருகமர்பூ முரண்கிடக்கை வரியணிசுடர் வான்பொய்கை இருகாமத் திணையேரிப் புலிப்பொறிப் போர்க்கதவின் 40 திருத்துஞ்சுந் திண்காப்பிற் புகழ்நிலைஇய மொழிவளர அறநிலைஇய அகனட்டிற் சோறுவாக்கிய கொழுங்கஞ்சி யாறுபோலப் பரந்தொழுகி ஏறுபொரச் சேறாகித் தேரொடத் துகள் கெழுமி நீறாடிய களிறுபோல வேறுபட்ட வினையோவத்து வெண்கோயில் மாசூட்டுந் 50 தண்கேணித் தகைமுற்றத்துப் பகட்டெருத்தின் பலசாலைத் தவப்பள்ளித் தாழ்காவின் அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும் ஆவுதி நறும்புகை முனைஇக் குயில்தம் மாயிரும் பெடையோ டிரியல் போகிப் பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த் தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும் முதுமரத்த முரண்களரி வரிமணல் அகந்திட்டை 60 இருங்கிளை யினனொக்கற் கருந்தொழிற் கலிமாக்கள் கடலிறவின் சூடுதின்றும் வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர்மலைந்தும் புனலாம்பற் பூச்சூடியும் நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும் நாண்மீன் விராய கோண்மீன் போல மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக் கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப் 70 பெருங்சினத்தாற் புறக்கொடாஅது இருஞ்செருவின் இகல்மொய்ம்பினோர் கல்லெறியும் கவண்வெரீஇப் புள்ளிரியும் புகர்ப்போந்தைப் பறழ்ப்பன்றிப் பல்கோழி உறைக்கிணற்றுப் புறச்சேரி மேழகத் தகரொடு சிவல்விளை யாடக் கிடுகுநிரைத் தெ·கூன்றி நடுகல்லின் அரண்போல நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய 80 குறுங்கூரைக் குடிநாப்பண் நிலவடைந்த இருள்போல வலையுணங்கு மணல்முன்றில் வீழ்த்தாழைத் தாட்டழ்ந்த வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர் சினைச்சுறவின் கோடுநட்டு மனைச்சேர்த்திய வல்லணங்கினால் மடற்றாழை மலர்மலைந்தும் பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும் புன்றலை இரும்பரதவர் 90 பைந்தழைமா மகளிரொடு பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது உவவுமடிந் துண்டாடியும் புலவுமணற் பூங்கானல் மாமலை யணைந்த கொண்மூப் போலவும் தாய்முலை தழுவிய குழவி போலவும் தேறுநீர்ப் புணரியோ டியாறுதலை மணக்கும் மலியோத் தொலிகூடல் தீதுநீங்கக் கடலாடியும் மாசுபோகப் புனல்படிந்தும் 100 அலவ னாட்டியும் உரவுத்திரை உழக்கியும் பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும் அகலாக் காதலொடு பகல்விளை யாடிப் பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும் பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத் துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்தும் மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும் 110 நெடுங்கால் மாடத் தொள்ளெரி நோக்கிக் கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுடர் எண்ணவும் பாட லோர்த்தும் நாடக நயந்தும் வெண்ணிலவின் பயன்றுய்த்தும் கண்ணடைஇய கடைக்கங்குலான் மாஅகாவிரி மணங்கூட்டும் தூஉவெக்கர்த் துயில் மடிந்து வாலிணர் மடற்றாழை வேலாழி வியந்தெருவின் நல்லிறைவன் பொருள்காக்கும் 120 தொல்லிசைத் தொழில்மாக்கள் காய்சினத்த கதிர்ச்செல்வன் தேர்பூண்ட மாஅபோல வைகல்தொறும் அசைவின்றி உல்குசெயக் குறைபடாது வான்முகந்தநீர் மலைப்பொழியவும் மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும் மாரிபெய்யும் பருவம்போல நீரினின்று நிலத்தேற்றவும் நிலத்தின்று நீர்ப்பரப்பவும் 130 அளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி அருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்லணங்கினோன் புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிபண்டம் பொதிமூடைப் போரேறி மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன் வரையாடு வருடைத் தோற்றம் போலக் கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை 140 ஏழகத் தகரோ டுகளு முன்றிற் குறுந்தொடை நெடும்படிக்காற் கொடுந்திண்ணைப் ப·றகைப்பிற் புழைவாயிற் போகிடைகழி மழைதோயும் உயர்மாடத்துச் சேவடிச் செறிகுறங்கிற் பாசிழைப் பகட்டல்குல் தூசிடைத் துகிர்மேனி மயிலியல் மானோக்கிற் கிளிமழலை மென்சாயலோர் 150 வளிநுழையும் வாய்பொருந்தி ஓங்குவரை மருங்கின் நுண்தா துறைக்கும் காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன செறிதொடி முன்கை கூப்பிக் செவ்வேள் வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் குழலகவ யாழ்முரல முழவதிர முரசியம்ப விழவறா வியலாவணத்து மையறு சிறப்பின் தெய்வஞ் சேர்த்திய மலரணி வாயிற் பலர்தொழ கொடியும் 160 வருபுனல் தந்த வெண்மணற் கான்யாற்று உருறுகெழு கரும்பின் ஓண்பூப் போலக் கூழுடைக் கொழுமஞ்சிகைத் தாழுடைத் தண்பணியத்து வாலரிசிப் பலிசிதறிப் பாகுகுத்த பசுமெழுக்கிற் காழூன்றிய கவிகிடுகின் மேலூன்றிய துகிற்கொடியும் பல்கேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர் 170 உறழ்குறித் தெடுத்த உருகெழு கொடியும் வெளிலிளக்குங் களிறுபோலத் தீம்புகார்த் திரைமுன்றுறைத் தூங்குநாவாய் துவன்றிருக்கை மிசைச்கூம்பி னசைச்கொடியும் மீந்தடிந்து விடக்கறுத்து ஊன்பொரிக்கும் ஒலிமுன்றில் மணற்குவைஇ மலர்சிதறிப் பலர்புகுமனைப் பலிப்புதவின் நறவுநொடைக் கொடியோடு 180. பிறபிறவு நனிவிரைஇப் பல்வே றுருவிற் பதாகை நீழல் செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற் செல்லா நல்லிசை யுமரர் காப்பின் நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்துங் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயுனும் 190 ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின் நீர்நாப் பண்ணு நிலத்தின் மேலும் ஏமாப்ப இனிதுதுஞ்சிக் கிளை கலித்துப் பகைபேணாது வலைஞர்முன்றில் மீன்பிறழவும் விலைஞர்குரம்பை மாவீண்டவும் கொலைகடிந்தும் களவுநீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் 200 நல்லனெடு பகடோம்பியும் நான்மறையோர் புகழ்பரப்பியும் பண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும் புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக் கொடுமேழி நசையுழவர் நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு மொப்ப நாடிக் கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது 210 பல்பண்டம் பகர்ந்துவீசும் தொல்கொண்டித் துவன்றிருக்கைப் பல்லாயமொடு பதிபழகி வேறுவே றுயர்ந்த முதுவா யக்கற் சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யழிய வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் 220 கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாந்கும் பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று பெருங்கை யானை பிடிபுக் காங்கு நுண்ணிதின் உணர நாடி நண்ணார் செறிவுடைத் திண்காப் பேறிவாள் கழித்து உருகெழு தாயம் ஊழினெய்திப் பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர் கடியரண் தொலைத்த கதவுகொல் மருப்பின் முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றாள் 230 உகிருடை யடிய ஓங்கெழில் யானை வடிமணிப் புரவியடு வயவர் வீழப் பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத் தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு வேறுபல் பூளைய டுழிஞை சூடிப் பேய்க்கண் அன்ன பிளிறுகடி முரசம் மாக்கண் அகலறை அதிர்வன முழங்க முனைகெடச் சென்று முன்சம முருக்கித் தலைதவச் சென்று தண்பணை எடுப்பி வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீடி 240 மாவிதழ்க் குவளையடு நெய்தலும் மயங்கிக் கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக் கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச் செறுவும் வாவிய மயங்கி நீரற்று அறுகோட் டிரலையடு மான்பிணை உகளவும் கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியிற் பருநிலை நெடுந்தூண் ஒல்கத் தீண்டிப் 250 பெருநல் யானையடு பிடிபுணர்ந் துறையவும் அருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின் முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த திரிபுரி நரம்பின் தீந்தொடை யோர்க்கும் பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துக் சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி அழல்வா யோரி அஞ்சுவரக் கதிர்ப்பவும் அழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவும் கணங்கொள் கூளியடு கதுப்பிகுத் தசைஇப் பிணந்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும் 260 கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டில் ஒண்சுவர் நல்லில் உயர்திணை யிருந்து பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த் தொடுதோ லடியரி துடிபடக் குழீஇக் கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட உணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து வளைவாய்க் கூகை நன்பகற் குழறவும் அருங்கடி வரைப்பின் ஊர்கவி னழியப் பெரும்பாழ் செய்தும் அமையான் மருங்கற 270 மலையகழ்க் குவனே கடல்தூர்க் குவனே வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத் தன்முன்னிய துறைபோகலிற் பல்லொளியர் பணிபொடுங்கத் தொல்லரு வாளர் தொழில் கேட்ப வடவர் வாடக் குடவர் கூம்பத் தென்னவன் திறல்கெடச் சீறி மன்னர் மன்னெயில் கதுவும் மதனுடை நோன்றாள் மாத்தனை மறமொய்ம்பிற் செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப் 280 புன்பொதுவர் வழிபொன்ற இருங்கோவேள் மருங்குசாயக் காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கிக் பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக் கோயிலொடு குடிநிறீஇ வாயிலொடு புழையமைத்து ஞாயிறொறும் புதைநிறீஇ பொருவேமெனப் பெயர்கொடுத்து ஒருவேனெப் புறக்கொடாது 290 திருநிலைஇய பெருமன் னெயில் மின்னொளியெறிப்பத் தம்மொளி மழுங்கி விசிபிணி முழவின் வேந்தர் சூடிய பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற் பொற்றொடிப் புதல்வர் ஒடி யாடவும் முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவும் செஞ்சாந்து சிதைந்த மார்பின் ஒண்பூண் அரிமா அன்ன அணங்குடைத் துப்பின் திருமா வளவன் தெவ்வர்க் கோக்கிய வேலினும் வெய்ய கானமவன் கோலினுந் தண்ணிய தடமென் தோளே. 301 பட்டினப்பாலை முற்றிற்று ------------------ This webpage was last revised on 7 August 2021. Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).